44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கை வந்தடைந்தார் பிரதமர் மோடி.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கிற செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளம் சென்ற பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா அரங்கிற்கு வருகை புரிந்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வழிநெடுகிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை மார்க்கமாக காரில் சென்ற பிரதமர் மோடி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
ஒலிம்பியாட் விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. அதிலும் செஸ் போர்டு கரை வேட்டி துண்டு அணிந்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM