இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரெட்மி 10A ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் ரெட்மி 10A ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம்.
அமேசான் மற்றும் Mi வலைதளத்தின் மூலமாக இந்த போனை வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வந்த ரெட்மி 10A போனின் மறுசீரமைக்கப்பட்ட மாடலாக இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.53 இன்ச் திரை அளவு கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே.
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
- மீடியாடெக் ஹீலியோ G25 SoC சிப்செட்.
- 13 மெகாபிக்சல் கொண்ட பின்பக்க கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இதில் இடம் பெற்றுள்ளது.
- 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போன்.
- 10 சார்ஜிங் சப்போர்ட் உடன் கூடிய 5000mAh பேட்டரி இதில் இடம் பெற்றுள்ளது.
- 4ஜி இணைப்பு மற்றும் மைக்ரோ USB போர்ட் கொண்டுள்ளது இந்த போன். இரண்டு நானோ சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது.
- இதன் விலை ரூ.10,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sale is Live!
Get a smoother experience with 6GB RAM on the all new #Redmi10ASport.
Available for just ₹10,999.
Visit https://t.co/9JYzL2KUmY pic.twitter.com/Qus9jfbmz3
— Redmi India | Redmi K50i (@RedmiIndia) July 26, 2022