நேற்று (29) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 2022 ஓகஸ்ட் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள .ந்த வர்த்தமானியில் 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதோடுஇ 9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது