டெல்லி: குடியரசு தலைவரை ‘ராஷ்டிரபத்னி’ விமர்சித்ததற்காக ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாராளுமன்றத்தில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறிய நிலையில், சோனியா காந்தி ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுள்ளார் என விளக்கம் அளித்துள்ளார். இருவரின் மாறுபட்ட விளக்கம் சர்ச்சையை ஏற்டுத்தி உள்ளது.
குடியரசு தலைவரை, ராஷ்டிரபத்னி’ என்று விமர்சித்த காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவருக்கு பதிலாக சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். அதுபோல, நாடாளுமன்ற வளாகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மக்களவையில் பேசிய ஸ்மிருதி ராணி, ஒரு பெண்ணை அவமதித்த செயலுக்காக சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி னார். காங்கிரசை கடுமையாக சாடியதோடு, ஜனாதிபதி திரௌபதி முர்முவை தீங்கிழைக்கும் வகையில் குறிவைத்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சியானது “பழங்குடியினருக்கு எதிரானது, தலித் எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கு எதிரானது” என்பது நாட்டுக்கே தெரியும் என்றார். நாடாளுமன்றத்திலும், தெருக்களிலும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானி கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்மிருதி ராpண, “இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்முவின் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து. அவர் காங்கிரஸ் கட்சியால் தீங்கிழைக்கும் வகையில் குறிவைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸார் அவரை பொம்மை வேட்பாளர் என்றும், காங்கிரஸ்காரர்கள் அவரை தீய சின்னம் என்றும் அழைத்தனர். திரௌபதி முர்மு ஜி நாட்டின் மிக உயரிய அரசியல் சாசனப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் அவர்களுக்கு எதிரான அவர்களின் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாகத் தெரியவில்லை” என்று விமர்சித்தார்.
பெண் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இருந்தும், அரசியல் சாசனப் பதவிகளில் இருக்கும் பெண்களை காங்கிரஸார் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சிகளை மத்திய அமைச்சர் கடுமையாக சாடினார் மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவில் பட்டியலிடப்பட்ட சாதியினரின் நிலை ‘மோசமாகிவிட்டது’ என்றும், திரௌபதி முர்முவை ஆளும் கட்சியால் ‘ஆதிவாசி சின்னமாக’ பயன்படுத்தக் கூடாது என்றும் அஜோய் குமார் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எம்.பி.யின் கருத்துக்கு எதிராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக எம்.பி.க்கள் வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
பாஜக எம்பி ரமாதேவி பேசும்போது, ஆதிர் ரஞ்சனின் பேச்சு அவமானகரமானது. இந்த அவமானத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பெண்களாகிய நாங்கள் அதை சகித்துக் கொள்ள மாட்டோம். பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராகக் கொண்டதற்காக வெட்கப்படுவதற்கு அவர்களுக்கு அவமானம். அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசமாக பேசினார்.
ஆனால், தனது ‘ராஷ்டிரபத்னி’ கருத்து தொடர்பாக, “மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, ராஷ்டிரபத்னி’ என்று நான் தவறாக சொல்லிவிட்டேன், அதற்காக என்னை தூக்கிலிட நினைத்தால், உங்களால் முடியும். ஆளும் கட்சி வேண்டுமென்றே திட்டமிட்டு மலையை உருவாக்க முயற்சிக்கிறது” என் தெரிவித்தார். மேலும், லோக்சபா காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, லோக்சபா சபாநாயகரிடம் பேச, அவகாசம் அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து, அதற்கான கடிதமும் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி CPP அலுவலகத்தில் மூத்த கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்; கட்சித் தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து கூறிய சோனியாகாந்தி, இந்த விவகாரத்தில் ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கேட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.