பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்கம்
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியான செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் இன்று முதல் தொடங்குகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றன. போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் – 4 மாவட்டங்களுக்கு விடுமுறை
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயரையும், புகைப்படத்தையும் சேர்க்க கோரி மதுரைக்கிளையில் முறையீடு. மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா தரப்பில் அவரது வழக்கறிஞர் சண்முகநாதன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி முன்னிலையில் முறையிட்டார். இந்த வழக்கு மதியம் விசாரணைக்கு வரவுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் . உதவி ஆணையர், இணை ஆணையர்களுக்கு தலா ரூ. 50,000 அபராதம். அபராத தொகையை 2 வாரங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.15 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த விரக்தியில் பிரபு என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலம், 3ஆவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. நேற்று 2ஆவது நாள் ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை ரூ. 1.49 லட்சம் கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 அதிகரித்து ரூ. 38,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் 4,767 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக செஸ் தீமில் கலைஞர் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
‘செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். செஸ்ஸுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் போட்டி நடைபெறுவது நமக்கு பெருமை’ என பிரதமர் மோடி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை ஒட்டி, விருதுநகரில் ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
விடுமுறையை ஈடுசெய்ய, ஆகஸ்ட் 13ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
ஒவ்வொரு முறையும் டெல்லி போலீஸ் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடுபதாக ஜோதிமணி தெரிவித்தார்.
டெல்லி போலீஸின் செயலுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தனர்.