பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆரம்பம் முதல் கொண்டு கறுப்பு பணத்தினை ஒழிக்க திட்டமிட்டு வருகின்றது. குறிப்பாக சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் குறித்த தரவுகளை அணுகியது குறிப்பிடத்தகக்து.
குறிப்பாக கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்தில் டிஜிட்டல் பயன்பாட்டினை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றது.
இதற்கிடையில் மக்களவையில் சில தினங்களுக்கு முன்பு கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்ம்லா சீதாராமன், கடந்த 2020ம் ஆண்டினை விட 2021ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதியானது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
1000 ஊழியர்களை வெளியேற்றும் ஓலா.. ஆனால் அதிலும் ஒரு டுவிஸ்ட்!
ஆதாரம் எதுவும் இல்லை
சுவிஸ் வங்கியில் உள்ள அனைத்து பணமும் கருப்பு பணமாக கருதக்கூடாது. சுவிஸ் வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ள இந்தியர்கள் குறித்து அதிகாரப்பூர்வ கணக்கீடுகள் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.
நடவடிக்கை
மேலும் வெளி நாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் சேமித்து வைத்துள்ள தொகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழங்குகளில் 8468 கோடிக்கும் அதிகமாக வரியை செலுத்துமாறும், 1294 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையினை அபராதமாக செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட நபரகளின் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துங்கள்
அதோடு கறுப்பு பண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்தும், 14,000கோடி ரூபாயாக்கு மேலாக வரி செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது மே வரையிலான தரவுகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கை
அண்மை காலத்தில் வெளியிடப்படாத வெளி நாட்டு சொத்துகள் மற்றும் வருமானங்களுக்கு வரி விதிக்க அரசாங்கம் பல உறுதியான மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கறுப்புப் பணம் மற்றும் வரி விதிப்பு சட்டம் 2015 ஆகியவையும் அடங்கும். இது கடுமையான தண்டனைகளை பரிந்துரை செய்கிறது. இதனை திறம்பட செயல்படுத்துவதற்காக 29 வெளி நாட்டு சொத்து விசாரணை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No valid proof of Swiss bank deposit: Nirmala Sitharaman
No valid proof of Swiss bank deposit: Nirmala Sitharaman/அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. சுவிஸ் டெபாசிட் குறித்து நிதியமைச்சர் சொல்வதை பாருங்க!