அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த வட்டி அதிகரிப்பானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி இந்தியாவிலும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 5ம் தேதியன்று ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் 35 – 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேசத்திற்காக அடித்துக்கொண்ட முகேஷ் அம்பானி, சுனில் மிட்டல்..!
வட்டி அதிகரிக்க தூண்டலாம்
தொடர்ந்து அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், அது முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். ஆக இதுவும் இந்திய மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.
தொடர்ந்து மே மற்றும் ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதமானது, தொடர்ந்து வட்டி அதிகரித்தது. இது வரவிருக்கும் மூன்றாவது கூட்டத்திலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய அதிகரிப்புகள்
மே மாதத்தில் 40 அடிப்படை புள்ளிகளாகவும், ஜூன் மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையும் நிச்சயம் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியின் இந்த நடவடிக்கையால், சாமானிய மக்கள் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
இஎம்ஐ அதிகரிக்கலாம்
குறிப்பாக வட்டி அதிகரிப்பானது கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம். அதேபோல வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்களுக்கும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக மாத தவணையானது அதிகரிக்கலாம். எனினும் டெபாசிட்களுக்கான வருமானம் என்பது அதிகரிக்கும்.
எஸ்பிஐ எதிர்பார்ப்பு
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய குழுமத்தின் தலைமை பொருளாதார நிபுணர் செளமியா காந்தி கோஷ், ரிசர்வ் வங்கியானது இந்த முறை 35 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
BofA செக்யூரிட்டீஸ் கணிப்பு
இதேபோல BofA செக்யூரிட்டீஸ் நிறுவனமும் ரிசர்வ் வங்கி இந்த முறை 35 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
மொத்தத்தில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையானது சாமானிய மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கலாம்,. முன்பை விட கூடுதல் செலவிடும் நிலைக்கு தள்ளப்படலாம்.
Loan EMIs & FD rates may rise further as RBI expected to hike interest rates
Loan EMIs & FD rates may rise further as RBI expected to hike interest rates/இஎம்ஐ அதிகரிக்கலாம்.. ஆர்பிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. எல்லாம் அமெரிக்காவால் வந்த வினை?