புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2021-22 நிதியாண்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.1,58,332 கோடி அன்னிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 76 சதவீதம் அதிகமாகும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அன்னிய நேரடி முதலீடுகள் (எப்.டி.ஐ) எனப்படுகின்றன. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் இந்தியாவில் எவ்வளவு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.89,766 கோடியாக இருந்த அன்னிய நேரடி முதலீடு, கடந்த 2021-22 நிதியாண்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.1,58,332 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 76 சதவீதம் அதிகமாகும்.
அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதன் காரணமாகவே 76 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அன்னிய நேரடி முதலீடுகள் விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, முக்கிய துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement