அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் ‘குருதி ஆட்டம்’. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னட்டு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளன.
கண்டிப்பில்லனா பசங்க கெட்டுபோயிடும் சார் என ப்ரியா பவானி சங்கர் பேசும் வசனமும், ’களத்துல சண்ட போடுங்கயா இப்படி ஆட உடாம பண்றிங்க’, ’கண்மணிய காப்பாத்தாம விட மாட்டேன் அது காந்திமதி வந்தாலும் சரி.. அந்த கடவுளே வந்தாலும் சரி’, ‘அவங்க கிட்ட பணம், பவர் என்ன வேணாலும் இருக்கலாம், இந்த கிரண்ட் நம்ம இடம், ஜெயிக்கணும் மாப்ள ஜெயிச்சே ஆகணும்’ என அதர்வா பேசும் வசனமும் மிரட்டலாக உள்ளது.