காதலரை பிரேக்-அப் செய்த திஷா பதானி
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான திஷா பதானி, தற்போது தனது காதலரை பிரிந்து விட்டதாக பாலிவுட் ஊடகங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது திஷா பதானியும், பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். அவர்களுக்கிடையே லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திஷா பதானி கூறி வந்துள்ளார். ஆனால் அதற்கு டைகர் ஷெராப் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாகவே அவர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அவரை திஷா பதானி பிரேக் அப் செய்து விட்டதாக கூறப்படுகிறது. பாலிவுட் மீடியாக்களில் பரபரப்பாக வெளியாகி உள்ள இந்த செய்திக்கு அவர்கள் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.