மதுரை மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் வண்டியூர் சதாசிவம் நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (46). இவர் அனுமார் பட்டியில் இரும்பு கடை வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மன வேதனையடைந்த ஹரிகிருஷ்ணன் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று இரும்பு கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.