சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும்: நிதின் கட்காரி

புதுடெல்லி,

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி பேசுகையில், ‘சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையின் 10 கட்ட பணிகளில் 6 கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 106 கி.மீ தூரம் செல்லும் இந்த பாதையில் 3 கட்டங்களாக பணிகள் தொடங்கியுள்ளன’ என்று தெரிவித்தார்.

இந்த சாலை அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பணிகள் முடிந்துவிட்டால் சென்னையில் இருந்து 3 மணிநேரத்துக்குள் பெங்களூர் செல்ல முடியும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.