சென்னை: சமீப காலமாக பள்ளி மாணாக்கர்கள் தற்கொலை முடிவை நாடுவது அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க ‘மானவர் மனசு’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 800 மருத்துவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பிர் மகேஸ் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் சமீப நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற்று வருகிறது. கடந்த (ஜூலை 13ம் தேதி), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஸ்ரீமதி, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர், விருத்தாச்சலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் இதுவரை 4 மாணவிகள், ஒரு ஆண் என 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்
இதையடுத்து பள்ளி மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கு வகையில், ‘மாணவர் மனசு’ திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த திட்டத்தை தலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் துவக்கி வைப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
இந்த திட்டத்திற்காக “மாநிலம் முழுவதும் உள்ள 413 கல்வித் தொகுதிகளில் தலா இருவர் வீதம் 800 டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் மாணவர்களின் படிப்பு, தொழில் மற்றும் நடத்தை மாற்றங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், பள்ளி மாணவர்களின் இளமைப் பருவப் பிரச்சினைகள், படிப்பின் அழுத்தம், குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் தொடர்பான பிற சிக்கல்கள் தொடர்பான பதட்டங்களுக்கு மத்தியில் மாணவர்களுக்கு மனநலத்தை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும் என தெரிவித்து உள்ளார்.