கவுகாத்தி: அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு நேற்று மதியம் இண்டிகோ விமானம் புறப்படும் போது, ஓடுபாதையில் இருந்து விலகி அதன் ஒரு ஜோடி சக்கரங்கள் அவுட்ஃபீல்டில் சிக்கியது. தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் பயணம் ரத்து செய்யப்பட்டதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து இண்டிகோ விமான நிலைய அதிகாரி கூறுகையில், ‘கவுகாத்தி – கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானம், ஓடுபாதையில் இருந்து சற்று விலகி, ஜோர்ஹாட் விமான நிலையத்தில் சேற்று வயலில் சிக்கிக்கொண்டது. இந்த சம்பவத்தால், விமானம் புறப்படுவதில் தாமதமானது. மற்றபடி விமானத்தில் இருந்த 98 பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படல்லை. அவர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து இறங்கினர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.