பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் ஆராய்வு!

இங்கையிலுள்ள பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் லங்கா ஐ ஓ சி நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் திரு குப்தா மற்றும் அவரது அதிகாரிகளுக்கும் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று (29) அமைச்சில் நடைபெற்றது.

டொலர் மற்றும் இலங்கை பணத்தில் படகுகளுக்கு தொடர்ச்சியாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் உதவ வேண்டும் என்று படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எரிபொருள் பிரச்சினையால் கடற்றொழிலாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அதனால் கடற்றொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் கவலை வெளியிட்ட அமைசசர் டக்ளஸ் தேவானந்தா, முடியுமானவகையில் விஷேடமான ஏற்பாடுகளின் அடிப்படையில் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க தாம் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரித்த குப்தா அவர்கள், பல்வேறு பாரிய நிறுவனங்கள் தம்மிடம் எரிபொருளுக்கான கோரிக்கையை விடுப்பதாகவும் அவர்களில் பலர் டொலர்களை வழங்க முன்வந்திருப்பதாகவும் அவ்வாறான நிலையில் கடற்றொழில் அமைச்சர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கடற்றொழிலாளர்களுக்கும் ஓகஸ்ட் 15 திகதிக்குப் பின்னர் கிரமமாக எரிபொருளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் துறையில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்றுமதியாளர்களும் குறிப்பிடத்தக்களவு பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதால், ஏற்றுமதியாளர்கள் முடியுமானளவு டொலர்களை வழங்கினால் வரவேற்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.