பாடசாலைகளுக்கு விடுமுறை கிடையாது! கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு


அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலைகள் தொடரும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாரத்திற்கு 3 நாட்கள் மாத்திரம் பாடசாலைகளை நடத்தும் நடைமுறை விரைவில் நீக்கப்படும் எனவும் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

விசேட கல்வித் திட்டங்கள் 

பாடசாலைகளுக்கு விடுமுறை கிடையாது! கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு | Information About School Holidays

இதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புடன் 24 பிரதான பாடங்களுக்கான உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சி அமர்வுகளை பல்கலைக்கழக அமைப்பு நடாத்தி வருகின்றதுடன், கோவிட் நிலைமை காரணமாக சரியாகக் கல்வி கற்க முடியாத சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை பொதுவான பின்னணியில் செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து வகுப்பறைகளில் கேள்வி பதில்களுடன் கூடுதல் கற்பித்தல் மூலம் மாணவர்களை தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்படுத்த முடியும்.

மேலும், 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் ஆரம்பக் கல்வியை இழந்து தரம் 3 இல் நுழையும் குழந்தைகளின் தற்போதைய செயல்திறன் நிலைகளை அடையாளம் காண விஞ்ஞான முறைகள் மூலம் ஏற்கனவே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறித்தும் அமைச்சர் கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.