மூன்று முறைதான், பிறகு நாடுகடத்தல்… வெளிநாட்டவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் எச்சரிக்கை!


சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில், இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் பெரும் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது, நம்மவர் ஒருவர் வெளிநாட்டில் பெரும்பதவியில் இருக்கிறார் என இந்தியர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு அந்த எண்ணம் உள்ளதா, அவர்கள் இந்தியர்களுக்கு, அல்லது பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு, அல்லது புலம்பெயர்ந்துவந்து இப்போது பெரும்பதவியிலிருப்பவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.

நாம் அவர்களை இந்திய வம்சாவளியினர் என நினைத்தாலும், அவர்களைப் பொருத்தவரை அவர்கள் தங்களை தாங்கள் வாழும் நாட்டவர்களாகத்தான் நினைக்கிறார்கள் என தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் அவர்.

உதாரணமாக பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்த பிரீத்தி பட்டேல்தான் இன்று புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்துவதில் மிகத் தீவிரமாக இருக்கிறார் என்பதை உலகமே அறியும்!

மூன்று முறைதான், பிறகு நாடுகடத்தல்... வெளிநாட்டவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் எச்சரிக்கை! | Prime Ministerial Candidate Warning To Foreigners

Credit: AFP

இப்படிப்பட்ட சூழலில், அந்த கட்டுரை ஆசிரியரின் கூற்றை ஊர்ஜிதம் செய்வது போல் பிரித்தானிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது…

பிரித்தானிய பிரதமர் பதவிக்குப் போட்டி போடுகிறார்கள் இரண்டுபேர்.

அவர்களில் ஒருவர் தற்போது பிரித்தானிய மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது, வெளிநாட்டவர்கள் மூன்று முறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டால், அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்! பிரித்தானியாவில் அதற்குப் பிறகு அமைதி நிலவும்…

இந்த வாக்குறுதியை அளித்துள்ளவர் இந்திய வம்சாவளியினர் என அழைக்கப்படும் ரிஷி சுனக்!

அதாவது, அவர் எப்படியாவது பிரித்தானிய மக்கள் மனதில் இடம்பிடிக்கப் பார்க்கிறார். அதற்கு அவர் பயன்படுத்தும் ஆயுதமே வெளிநாட்டவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால் அவர்களை நாடுகடத்துவது என்பதுதான். அத்துடன் கன்சர்வேட்டிவ் கட்சியினர் தனக்கு வாக்களித்து தன்னை பிரதமர் ஆக்குவார்களானால், ஆண்டொன்றிற்கு நாடுகடத்தப்படுவோரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, நாடுகடத்தப்படும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை ஆண்டொன்றிற்கு 5,500க்கும் அதிகமாக்குவேன் என்றும் கூறியுள்ளார் ரிஷி.

ஆனால், இது வெறும் கண்துடைப்பு வித்தை, அப்படி நாடுகடத்தப்படுவோரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டம் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்கிறார் பிரதமர் போட்டியிலிருக்கும் மற்றொரு வேட்பாளரான லிஸ் ட்ரஸ்ஸின் ஆதரவாளரும், முன்னாள் புலம்பெயர்தல் அமைச்சருமான Chris Philip.

இவர்கள், கொலைகாரர்களையும் வன்புணர்வுக் குற்றங்களில் ஈடுபட்டவர்களையும் விட்டுவிடுவார்கள், ஒரு பாக்கெட் சிப்ஸ் திருடியவர்களை இரக்கமில்லாமல் சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்கிறார் அவர்.
 

மூன்று முறைதான், பிறகு நாடுகடத்தல்... வெளிநாட்டவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் எச்சரிக்கை! | Prime Ministerial Candidate Warning To Foreigners

thesun



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.