ஸ்விக்கி ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி.. யாருக்கெல்லாம்?

இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அதன் பெரும்பாலான ஊழியர்களுக்கு, நிரந்தமாக வீட்டில் இருந்து பணி என்ற ஆப்சனை கொடுத்துள்ளது.

ஸ்விக்கி-யின் இந்த முடிவானது அதன் குழுத் தேவைகள் மற்றும் உயர் அதிகாரிகள், ஊழியர்களின் கருத்துகள் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கொரோனாவின் வருகைக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்தனர். இது ஒரு நெகிழ்வுத் தன்மையை அளித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தி திறனையும் அதிகரித்துள்ளதாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எல்ஐசியில் இப்படி ஒரு பாலிசி இருக்கா.. எதிர்காலத்தை பற்றி கவலையே வேண்டாம்..!

நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணி

நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணி

ஸ்விக்கியின் இந்த புதிய முடிவால், கார்ப்பரேட், மத்திய வணிக செயல்பாடுகள், தொழில்நுட்ப குழுக்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணிபுரிவார்கள். இவர்கள் தனிப்பட்ட முறையில் ஊழியர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்த, ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை அவர்களின் அடிப்படை இடத்தில் ஒன்று கூட வேண்டும்.

வாரத்தில் சில நாட்கள் வரணும்

வாரத்தில் சில நாட்கள் வரணும்

இதே டெலிவரி பார்ட்னர்களை எதிர்கொள்ளும் ஊழியர்கள், வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும் எங்களின் கவனம் ஊழியர்கள் அவர்களின் பணியினை ஒரு நெகிழ்வுடன் செயல்படுத்துவதாகும்.

என்ன காரணம்?
 

என்ன காரணம்?

நாங்கள் எங்களின் ஊழியர்களின் திறமைகளை கவனித்து வருகின்றோம். இதுவே எங்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி கொடுக்க வழிவகுத்தது. எங்கள் ஊழியர்கள் எங்கிருந்தாலும் நெகிழ்வாக பணிபுரிய வேண்டும். இதனால் தான் அவர்களுக்கு இத்தகைய ஆப்சனை நிறுவனம் வழங்குகின்றது என ஸ்விக்கியின் மனிதவள மேலாளர் கிரிஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து முதலீடு

தொடர்ந்து முதலீடு

நாங்கள் தொடர்ந்து ஊழியர்களின் அனுபவத்தினை மேம்படுத்தவும், வேலையில் புதுமைகளை மேம்படுத்தவும் தொடர்ந்து தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் தொடர்ந்து தீவிரமாக முதலீடினை செய்வோம் என்று மேனன் கூறியுள்ளார்.

ஸ்விக்கி

ஸ்விக்கி

ஸ்விக்கி தற்போது 27 மாநிலங்களில் உள்ள 487 நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. இது தவிர 4 யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகின்றது. 2020ம் ஆண்டு முதல் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் மாடலை செயல்படுத்தி வரும் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: swiggy ஸ்விக்கி

English summary

Swiggy has allowed most of its employees to work from home permanently

Swiggy has allowed most of its employees to work from home permanently/ஸ்விக்கி ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி.. யாருக்கெல்லாம்?

Story first published: Friday, July 29, 2022, 18:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.