Bizarre! பாகிஸ்தானில் எருமையை விட மலிவான விலையில் விற்கப்படும் சிங்கங்கள்

நமது அண்டை நாடான பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை உலகமே அறியும். அதற்கு தனியான விளக்கங்கள் தேவை இல்லை. பல விதமான முயற்சிகளுக்குப் பிறகும் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை. இங்கு பணவீக்கம் விண்ணைத் தொடும் நிலையில் உள்ளது. இதனால் உணவு பொருட்கள், பானங்கள் மட்டுமின்றி, கால்நடைகளின் விலையும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் சிங்கத்தின் விலை, எருமை மாட்டின் விலையை விட குறைவு. அதாவது பாகிஸ்தானில் எருமை மாட்டை விட குறைந்த விலையில் சிங்கத்தை வாங்கலாம் என செய்திகள் கூறுகின்றன. 

சாமா டிவியில் வெளியான அறிக்கையில், லாகூர் சஃபாரி மிருகக்காட்சிசாலை நிர்வாகம், தன்னிடம் உள்ள சில ஆப்பிரிக்க சிங்கங்களை விற்க விரும்புகிறது. இதற்காக சிங்கம் ஒன்றின் விலை 1,50,000 பாகிஸ்தான் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானில் ஆன்லைன் சந்தையில் எருமை மாட்டின் விலை என்னவென்று பார்த்தால் ரூ.3,50,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும். மொத்தத்தில் எருமை மாட்டின் விலை சிங்கத்தை விட பல மடங்கு அதிகம்.

லாகூர் சஃபாரி மிருகக்காட்சிசாலை நிர்வாகம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தனது 12 சிங்கங்களை விற்க தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் மூன்று சிங்கங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அவை தனியார் அல்லது கால்நடை வளர்ப்பு ஆர்வலர்களுக்கு மிகவும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன.

மேலும் படிக்க | திவால் நிலையில் பாகிஸ்தான்… அரசு சொத்துக்களை விற்க முடிவு

உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பு மற்றும் இதர செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தானில் உள்ள லாகூர் உயிரியல் பூங்கா நிர்வாகம்  சிங்கங்களை விற்க முடிவு செய்துள்ளதாக சாமா டிவி செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கங்களை பராமரிப்பது மிகவும் சிரமமாக இருப்பதால், குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. நிதி நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிப்பதற்கு நிதி தேவைப்படுகிறது. எனவே இதற்காக சிங்கங்களை விற்கும் யோசனை பரிசீலிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மற்ற உயிரியல் பூங்காக்களை விட லாகூரில் உள்ள சஃபாரி உயிரியல் பூங்கா மிகப் பெரியது. 142 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இருப்பினும், அதில் உள்ள 40 சிங்கங்கள் காரணமாக இது பிரபலமான உயிரியல் பூங்காவாக கருதப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து மிருகக்காட்சிசாலை நிர்வாகம் கூறுகையில், வருமானத்திற்காக சில சிங்கங்களை விற்பது வழக்கம். கடந்த ஆண்டும் சஃபாரி மிருகக்காட்சிசாலையில் இட பற்றாக்குறையை காரணம் காட்டி 14 சிங்கங்கள் விற்பனை செய்யப்பட்டன என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.