இந்தியாவில் தொலை தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. பல தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் உச்சத்தை எட்டி வரும் நிலையில், அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி. எஸ். என். எல் நலிவை சந்தித்து இருக்கிறது என்றே கூறவேண்டும்.
எனவே அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என அழைக்கப்படும் பி. எஸ். என். எல் நிறுவனத்தை மேம்படுத்த 1.64 லட்ச கோடி ரூபாய் நிதியளிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சரை குழு கூறியுள்ளது.
இது குறித்து மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், “பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மேம்படுத்த நிதியளிக்க உள்ள 1.64 லட்சம் கோடி ரூபாயானது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பயன்படுத்தபட உள்ளது. 4ஜி சேவைகளை வழங்க தேவையான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும் மத்திய அரசு பி.எஸ்.என்.எல் -க்கு வழங்கும். இதற்காக நிதி தொகையில் இருந்து 22,471 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
கிராமப்புற மக்களுக்கும் 4ஜி வசதியை பெற 26,316 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். பி.எஸ்.என்.எல் உடன் பாரத் நெட் மற்றும் பி.பி.என்.எல் போன்ற நிறுவனங்கள் இணைக்கப்படும் என கூறினார்.