பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி
மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கப்பட உள்ளன. இந்தியாவில் முதல் முறையாக போட்டி நடைபெறுகிறது. நேற்று செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெற்றது. 187 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பிரதமர், முதல்வர் பங்கேற்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கின்றனர்.
வெளிநாடுகளில் நடைபெறும் மருத்துவ இளநிலை தேர்வில், ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக படிப்பை முடித்து சான்றுகளை பெற்றவர்கள் பங்குபெறலாம் என்று, கொரோனா, ரஷ்யா – உக்ரைன் போர் சூழல் காரணமாக இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கியது முதல் போட்டியில் இந்திய 1 அணி, ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது.
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய அரசு விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கை தேவை என்றும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது” சென்னை சுற்றுப்பயண வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சி ட்வீட்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் காவல்துறைக்கு இல்லை. வதந்தி பரப்பிய 63 யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை – காவல்துறை
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது. உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும்” பிரதமரை சந்தித்த பிறகு உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் பேட்டி.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி. புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் உயிரிழப்பு கல்பாளையம் கல்குவாரியை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு.
’அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பேசினார்.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு. பொதுக்குழு விவகாரத்தை 3 வாரங்களுக்குள் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி உத்தரவு .
பட்டத்தோடு படிப்பு முடிந்து விடாது. பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் வந்திருப்பது மாணவர்களுக்கு பெருமை பட்டம் பெறுவதோடு படிப்பு முடிந்துவிடுவதில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
“மாணவர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி” புதிய கல்வி கொள்கை சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது.மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி – பிரதமர் மோடி பேச்சு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42ஆவது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். விழாவில் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய நிலையில், பரிசோதனை செய்ததாக தகவல்.
வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, முதல் டி20 ஆட்டத்தை இன்று தொடங்குகிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ள இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.