ஆசியாவின் பணக்கார பெண் ஆனார் சாவித்ரி ஜிண்டால் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் ஆசியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். முன்னதாக, இந்த குழுமத்தின் தலைவராக இருந்த இவரது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் கடந்த 2005-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதன்பிறகு அவரின் மனைவி சாவித்ரி ஜிண்டால் தொழிலை வழிநடத்தி சென்றார். அதன்பிறகு அரசியலிலும் இறங்கினார். இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவராக உயர்ந்த இவரது சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்தது.

image
இச்சூழலில், ப்ளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸ் வெளியிட்டுள்ள டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியலில் சாவித்ரி ஜிண்டால் முதலிடம் பிடித்துள்ளார். சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு 11.3 பில்லியன் டாலர் என்றளவில் உள்ளது. இவரைத் தொடர்ந்து சீனாவின் ஃபேன் ஹாங்வே இரண்டாவது இடத்திலும், யாங் ஹூயன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தற்போது சாவித்ரி ஜிண்டால் ஆசிய முதல் பெண் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

இதையும் படிக்க: ”என் குறிக்கோள் நிறைவேறாம செத்தாலும் குளிக்க மாட்டேன்” -பீகார் நபரின் விசித்திரமான சபதம்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.