உத்தரபிரதேசத்தில் காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!!

பண்டா: உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் கிர்வான் பகுதியில் காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 10 வயதுக்கு உட்பட 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மீட்டுப்பணிகளில் ஈடுபட்டனர். சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களுக்கான நிவாரண உதவியை உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘அதிவேகமாக சென்ற காரால் விபத்து ஏற்பட்டது. கார், ஆட்டோ மீது மோதியதால் அந்த ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.