150 க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலைய முனையத்தில் கடந்த செவ்வாய் அன்று இரவு முழுவதும் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிகழ்வு குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலான நிலையில் இதை பார்த்த பொதுமகக்ள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த சம்பவம் குறித்து தற்போது பார்ப்போம்.
இரவில் தரையிறங்கும் வசதி இல்லாத 25 இந்திய விமான நிலையங்கள்… முழு லிஸ்ட்!
திருப்பிவிடப்பட்ட விமானம்
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள புரூம் மற்றும் நியூமனில் இருந்து இரண்டு குவாண்டாஸ் ஏர்வேஸ் விமானங்கள் செவ்வாயன்று தெற்கு நகரமான பெர்த்துக்குச் செல்லவிருந்தன. ஆனால் விமானம் பயணிகளின் இலக்கான ஜெரால்டன் விமான நிலையத்திலிருந்து திடீரென 420 கிலோமீட்டர் தொலைவில் திருப்பிவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மூடுபனி
விமான நிலையத்தை சுற்றி மூடுபனி இருப்பதால், விமானத்தை தரையிறக்குவது பாதுகாப்பானது அல்ல என்று கூறப்பட்டதால் விமானங்கள் தரையிறங்கும் இடம் மாற்றியமைக்கப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் முதன்மை விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தரையில் தூங்கிய பயணிகள்
இந்த இரு விமானங்களில் பயணம் செய்த பயணிகள் செவ்வாய் இரவு ஜெரால்டன் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். இந்த விமானத்தில் வந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தின் தரையில் பயணிகள் தூங்கும் புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாற்காலியில் தூக்கம்
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘திடீரென 150 பயணிகள் வந்துவிட்டதால் அவர்களுக்கு தங்குமிடம் கிடைக்காததால் ஜெரால்டன் விமான நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வேண்டிய நிலை இருந்தது என்று தெரிவித்தார். விமான பயணிகளுக்கு தங்குமிடத்தை கண்டுபிடிக்க நாங்கள் முயற்சித்தோம் என்றும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஹோட்டல் அறைகள் காலியாக இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
உணவு போர்வை கூட இல்லை
விமான பயணி ஆண்ட்ரூ டைமோக் என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘விமான நிலையத்தில் வெப்பநிலை 4.8 டிகிரி செல்சியஸாக இருந்தது என்றும், உணவு, போர்வைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட அதிகாரிகள் எங்களுக்கு தரவில்லை என்றும் கூறினார்.
மன்னிப்பு
இந்த நிலையில் குவாண்டாஸ் மற்றும் ஜெரால்டன் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது என்றும், விமான பயணிகள் ஒரு சங்கடமான இரவை அனுபவித்திருப்பார்கள் என்பதை ஒப்பு கொள்வதாகவும் கூறினார்.
More than 150 passengers were forced to sleep in a cold airport terminal!
More than 150 passengers were forced to sleep in a cold airport terminal! | கடுங்குளிரில் தரையில் படுத்து தூங்கிய 150 விமான பயணிகள்: என்ன காரணம்?