சீன பணக்கார பெண் 50 யாங் ஹுயான் கண்ணீர்.. 50% சொத்து மாயம்..!!

அமெரிக்கப் பொருளாதாரத்துடன் போட்டிப்போட்டு வரும் சீனா தற்போது ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சியால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

ஒருபக்கம் மக்களின் எதிர்ப்பும், போராட்டமும் பெரு பிரச்சனையாக வெடித்திருக்கும் நிலையில் மறுபுறம் ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சியால் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மோசமான நிலையை எதிர்கொண்டு இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் துறையின் பெண் தொழிலதிபரான யாங் ஹுயான் சொத்து மதிப்பு 50 சதவீதம் சரிந்துள்ளது.

சீனா-வின் திடீர் அறிவிப்பு.. 300 பில்லியன் டாலர் ஒதுக்கீடு.. பிழைக்குமா ரியல் எஸ்டேட்..!

சீன ரியல் எஸ்டேட்

சீன ரியல் எஸ்டேட்

சீனாவின் ரியல் எஸ்டேட் துறை மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்ட நிலையில் ஆசியாவின் பணக்காரப் பெண் மற்றும் சீன நாட்டைச் சேர்ந்தவருமான யாங் ஹுயான்-ன் சொத்து மதிப்புப் பாதியாகக் குறைத்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் தரவுகள் அடிப்படையில் கிட்டத்தட்ட 24 பில்லியன் டாலரில் இருந்து 11 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ்

கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ்

41 வயதான யாங் ஹுயான் சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமாக விளங்கும் கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் என்னும் நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகிறார். 1992 இல் குவாங்டாங் மாகாணத்தின் ஃபோஷான் (Foshan) நகரில் கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது.

 சீனா
 

சீனா

கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைத் தனது தந்தை நிர்வகித்து வந்த நிலையில் தற்போது இந்த வர்த்தகம் யாங் ஹுயான் கட்டுப்பாட்டில் உள்ளது. சீனாவில் அதிக ரியல் எஸ்டேட் விற்பனை கொண்ட நிறுவனமாக உள்ளது.

 ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி

ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி

சீன ரியல் எஸ்டேட் துறையில் வீட்டு விலை வீழ்ச்சி, வீடு வாங்குபவர் மத்தியில் தேவை குறைந்தது, கழுத்தை நெறிக்கும் அளவிற்குக் கடன் சுமை காரணமாகப் பல நிறுவனங்கள் திவால் ஆனதால் கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. குறிப்பாகச் சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் சரிந்தது.

11 பில்லியன் டாலர்

11 பில்லியன் டாலர்

இதன் வாயிலாகக் கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராக 41 வயதான யாங் ஹுயான் சொத்து மதிப்பு 24 பில்லியன் டாலரில் இருந்து 11 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. யாங் ஹுயான் மட்டும் அல்லாமல் பல முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு பெரிய அளவில் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Asia’s richest woman Yang Huiyan loses 50 percent wealth on China real estate crisis

Asia’s richest woman Yang Huiyan loses 50 percent wealth on China real estate crisis சீன பணக்கார பெண் 50 யாங் ஹுயான் கண்ணீர்.. 50% சொத்து மாயம்..!!

Story first published: Saturday, July 30, 2022, 16:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.