மாமல்லபுரம்,
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று 2வது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.அதில் இந்திய ‘ஏ’ அணி , மால்டோவா அணியுடன் மோதுகிறது.செஸ் வீரர்கள் ஹரிகிருஷ்ணன் ,நாராயணன் ,விதித் குஜராத்தி ,சசி கிரண் ,அர்ஜுன் எர்கியாசி ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய ‘பி’ அணி , எஸ்டோனியா அணியுடன் மோதுகிறது.சரின்,குகேஷ் ,பிரக்ஞானந்தா,அதிபன்,ரவுனாக் சத்வானி ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய ‘சி’அணி, மெக்சிகோ அணியுடன் மோதுகிறது.சூர்யா சேகர் கங்குலி ,சேதுராமன் , அபிஜீத் குப்தா ,கார்த்திகேயன் முரளி ,அபிமன்யு புரணிக் ஆகியயோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்
பெண்கள் பிரிவில் ;
இந்திய ‘ஏ’ அணி , அர்ஜென்டினா உடன் மோதுகிறது.கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி,ஆகியயோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்
இந்திய ‘பி ‘ அணி , லாட்வியா அணியுடன் மோதுகிறது.வந்திகா அக்ரவால், சவும்யா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி, திவ்யா தேஷ்முக்,ஆகியயோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்
இந்திய ‘சி’ அணி , சிங்கப்பூர் அணியுடன் மோதுகிறது.ஈஷா காரவடே, சாஹிதி வர்ஷினி, பிரத்யூஷா போட்டா, நந்திதா, விஷ்வா வஸ்னவாலா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.