தடைகளை உடைத்து ஸ்டார்ட் அப் துறையில் முன்னேறிய 3 பெண் தொழிலதிபர்கள்!

ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் தற்போது பெண்களும் முன்னேறி வரும் நிலையில் தொழிலதிபர்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் அளவுக்கு இன்னும் அதிக அளவில் தொழில் அதிபர்களாக பெண்கள் வரவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலதிபர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் திவ்யா கோகுல்நாத், ருச்சி கல்ரா, நேஹா பன்சால் ஆகிய மூன்று பெண் தொழிலதிபர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

அரபு நாடுகளை ஈர்க்க ரஷ்யா புதிய திட்டம்.. இஸ்லாமிய வங்கி சேவை அறிமுகம்..!

ஸ்டார்ட் அப் பெண்கள்

ஸ்டார்ட் அப் பெண்கள்

இந்தியாவின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலில் நுழையும் பெண்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இது இன்னும் ஆண்களை விட குறைவாக உள்ளது என்றும் தற்போது பெண்கள் தொடக்க நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஐந்தில் ஒரு பங்கு பெண்கள்

ஐந்தில் ஒரு பங்கு பெண்கள்

IBEF அறிக்கையின்படி, இந்தியாவில் ஐந்தில் ஒரு பங்கு பெண்கள் MSMEகளின் உரிமையாளர்களாக உள்ளனர். மேலும் பெண் தொழிலதிபர்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 700 பில்லியன் டாலர்களை இந்தியா சேர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90% வளர்ச்சி
 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90% வளர்ச்சி

பெண்களால் நிறுவப்பட்ட அல்லது இணைந்து நிறுவப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் ஐந்து ஆண்டுகளில் 10% அதிக ஒட்டுமொத்த வருவாயை உருவாக்குகின்றன. பெண்களால் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் ஆண்களை விட 3 மடங்கு பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. மேலும், பெண்கள் தலைமையிலான வணிகங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டங்கள் - தடைகள்

போராட்டங்கள் – தடைகள்

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவை பொருத்தவரை ஒரு பெண் ஒரு தொழிலதிபராக மாறுவது எளிதானது அல்ல என்றும், அது பல போராட்டங்கள் மற்றும் தடைகளை சந்திக்கும் நிலையை உருவாக்கி வருகிறது என்பதும் உண்மை நிலவரமாக உள்ளது.

மூன்று பெண் தொழிலதிபர்கள்

மூன்று பெண் தொழிலதிபர்கள்

BYJU இன் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத், OfBusiness இணை நிறுவனர் ருச்சி கல்ரா மற்றும் லென்ஸ்கார்ட்டின் நேஹா பன்சால் போன்ற முன்னணி பெண் தொழில்முனைவோர் ஒவ்வொரு நாளும் தடைகளை உடைத்து முன்னேறி வருகின்றனர். அவர்கள் தங்கள் நிறுவனங்களை யூனிகார்ன்களாக மாற்றி, சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று கனவு காணும் கோடிக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாய் உள்ளனர்.

பணக்கார பெண்கள் பட்டியல்

பணக்கார பெண்கள் பட்டியல்

கோகுல்நாத், கல்ரா மற்றும் பன்சால் ஆகியோர் கோடக் தனியார் வங்கி ஹுருன் முன்னணி செல்வந்த பெண்கள் பட்டியல் 2021ஆம் ஆண்டின் பட்டியலின்படி பணக்கார பெண் தொடக்க தொழில்முனைவோராக உள்ளனர். இந்த மூன்று ஊக்கமளிக்கும் பெண் தொழிலதிபர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

திவ்யா கோகுல்நாத்

திவ்யா கோகுல்நாத்

இந்திய சந்தையில் உள்நாட்டு எட்டெக் யூனிகார்ன் BYJU’s ஐ நிறுவி விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்த திவ்யா கோகுல்நாத் தற்போது பல்வேறு நாடுகளில் வணிகத்தை தீவிரமாக உருவாக்கி, விரிவாக்கி வருகிறார். பெங்களூருவில் உள்ள ஆர்வி பொறியியல் கல்லூரியில் பயோடெக்னாலஜியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். மேலும் அவர் 2008 ஆம் ஆண்டில் தனது 21வது வயதில் ஆசிரியராக பணியை தொடங்கினார். அப்போது அவர் கணிதம், ஆங்கிலம் மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவு ஆகியவற்றைக் கற்பித்தார்.

திவ்யாவின் கணவர்

திவ்யாவின் கணவர்

திவ்யா கோகுல்நாத் 2011ஆம் ஆண்டு தனது கணவர் பைஜு ரவீந்திரனுடன் இணைந்து BYJU’s ஐ நிறுவினார். இந்தியா ஆசிரியர்களின் மையமாக மாறுவதை உணர்ந்து கொண்டார். ஆசிரியர்களுக்கு, ஒரு பெரிய திறன் உள்ளது என்றும், கற்பித்தலின் பொற்காலம் மீண்டும் வந்துவிட்டது என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்தியா கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக பெண்களை மென்பொருள் பொறியாளர்களாக மாற்றி உலகிற்கு அளித்த நிலையில் இப்போது நாங்கள் உலகிற்கு ஆசிரியர்களை உருவாக்கி வருகிறோம் என்று ஒரு பேட்டியில் கூறினார்.

ருச்சி கல்ரா

ருச்சி கல்ரா

38 வயதான ருச்சி கல்ரா மற்றும் அவரது கணவர் ஆஷிஷ் மொஹபத்ரா இருவரும் இணைந்து இரண்டு ஸ்டார்ட்அப்களை நிறுவினர். 2016ஆம் ஆண்டு OfBusiness மற்றும் Oxyzo ஆகிய இவர்கள் தொடங்கிய இரண்டு நிறுவனங்களும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தன. 2,600 கோடி நிகர மதிப்புடன், கோடக் ஹுருன் பட்டியலில் கல்ரா இரண்டாவது பணக்கார பெண் ஸ்டார்ட்அப் தொழிலதிபர் என்ற பெருமையை பெற்றார்.

படிப்பு

படிப்பு

டெல்லியைச் சேர்ந்த ருச்சி கல்ரா இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இரசாயனப் பொறியியலில் இளங்கலை தொழில்நுட்ப பட்டம் பெற்றார், பின்னர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்தார். அவர் தனது கணவருடன் இணைந்து இரண்டு நிறுவனங்களையும் நிறுவுவதற்கு முன்பு எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மெக்கின்ஸி இந்தியாவில் சில்லறை மற்றும் SME வங்கி சேவைத் துறையை வழிநடத்தினார்.

நேஹா பன்சால்

நேஹா பன்சால்

புது தில்லியில் பிறந்து வளர்ந்த பன்சால், 2008ஆம் ஆண்டு லென்ஸ்கார்ட் என்ற கண்ணாடி சில்லறை வணிகத்தை இணைந்து நிறுவினார். இந்த நிறுவனத்தை நிறுவிய பிறகு, அதன் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு ஒரு பிரத்யேக குழுவை அமைத்தார். இந்த குழுவின் மூலம் தனது நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்தார். கோடக் ஹுருன் அறிக்கையின்படி, பன்சால் தற்போது ரூ.1,540 கோடி நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரலில் ஆல்பா வேவ் இன்குபேஷனிலிருந்து ரூ.760 கோடி நிதி திரட்டியது இவரது சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Meet Divya Gokulnath, Ruchi Kalra and Neha Bansal: The richest women startup entrepreneurs in India

Meet Divya Gokulnath, Ruchi Kalra and Neha Bansal: The richest women startup entrepreneurs in India | தடைகளை உடைத்து ஸ்டார்ட் அப் துறையில் முன்னேறிய 3 பெண் தொழிலதிபர்கள்!

Story first published: Saturday, July 30, 2022, 16:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.