தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு.. ஆம்பூர் பொறியியல் மாணவரிடம் 9 மணி நேரம் விசாரணை!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களுக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு அளித்து வந்ததாக கல்லூரி மாணவர் கைதுசெய்யப்பட்டு, அவரிடம் 9 மணி நேரத்திற்கு மேலாக மத்திய உளவுத்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லி பள்ளிவாசல் தெருப் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அனாஸ் அலி. இவர், இன்று அதிகாலை மத்திய உளவு துறை மற்றும் சிறப்பு புலனாய்வு துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் உள்ள காவல் நிலையத்திற்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டு, சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.
image
தற்போது வரையிலான விசாரணையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய இயக்கங்கள், இன்ஸ்டா, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளை தொடர்ந்து (Like) விரும்பியும், மற்றவர்களுக்கு (Share) பகிர்ந்தும் வருவதோடு, அதை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளார். இதன் அடிப்படையில் இவரது சமூக வலைதளப்பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு பிடித்து விசாரிக்கப்பட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்ஃபோன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.