தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா-வை டார்கெட் செய்கிறதா சீன உளவு கப்பல்..? என்ன நடக்குது..?!

இந்நிய – சீனா எல்லை பிரச்சனை என்னும் முடியாத நிலையில் தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையிலும் சீனா தொடர்ந்து எல்லைப் பகுதியில் தனது ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் சிறு கிராமத்தையே எல்லையில் உருவாகியுள்ளது.

தற்போது புதிதாகச் சீனா-வின் மிக முக்கியமான உளவு கப்பல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா எனத் தென்னிந்திய மாநிலங்களைக் குறிவைத்து இந்திய கடலில் நிற்கிறது.

ஆட்டோ புக் செய்ய இனி ஆப் அவசியமில்லை… ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் போதும்!

சீனாவின் யுவான் வாங் 5

சீனாவின் யுவான் வாங் 5

இந்தியப் பெருங்கடல் சீன உளவுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ நிற்கும் நிலையில் இராணுவ மற்றும் மூலோபாயத் தாக்கங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல், இந்திய பாதுகாப்பு கட்டமைப்பிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

சீன நீர்மூழ்கிக் கப்பல்

சீன நீர்மூழ்கிக் கப்பல்

ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் டிராக்கிங் பிரிவில் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் ஒரு தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளது என்றால் மிகையில்லை. 2014 இல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன நீர்மூழ்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இந்தக் கப்பல் அதன் திறன்களில் பல மடங்கு ஆபத்தானது.

750 கிலோ மீட்டர் ஏரியல் ரீச்
 

750 கிலோ மீட்டர் ஏரியல் ரீச்

சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் மூலம் சுமார் 750 கிலோ மீட்டர் ஏரியல் ரீச் கொண்டு உள்ளது. இந்தக் கப்பல் மூலம் இந்திய எல்லைக்குள் இருக்கும் கல்பாக்கம், கூடங்குளம், மற்றும் அட்டாமிக் ரிசர்ச் சென்டர் ஆகியவற்றை டிராக் செய்ய முடியும்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம்

தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம்

அனைத்தையும் தாண்டி தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம் எனத் தென்னிந்தியப் பகுதியில் இருக்கும் 6 முக்கியத் துறைமுகங்களைச் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் டிராக் செய்யவும், கண்காணிக்கவும் முடியும். இந்தக் கப்பல் கொண்டு தென்னிந்தியப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்ய முடியும்.

எல்லை

எல்லை

 

தற்போது இந்திய ராணுவம் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் குறித்தும் அதன் செயல்பாடுகளைக் குறித்தும் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. சீனாவின் பாதிப்பு மேற்கு எல்லை பகுதியைத் தாண்டி தற்போது தென்னிந்தியப் பகுதிகளுக்கும் வந்துள்ளது…

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kerala, Tamil Nadu and Andhra ports may on tracking range Chinese spy ship Yuan Wang 5 in Indian Ocean

Kerala, Tamil Nadu and Andhra ports may on tracking range Chinese spy ship Yuan Wang 5 in Indian தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா-வை டார்கெட் செய்கிறதா சீன உளவு கப்பல்..? என்ன நடக்குது..?!

Story first published: Saturday, July 30, 2022, 11:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.