இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திப்பும் பொதுவான பிரச்சினை நீரிழிவு நோய். உடல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது. சரியான உணவு பமுறையை கடைப்பிடித்து வந்தால் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வுவுடன் இருப்பது வழக்கமான ஒன்று. சில நேரங்களில் மிகக் குறைவாகவும், சில நேரங்களில் அதிகமாகவும் இருக்கும். இந்த இரண்டு நிகழ்வுகளுமே நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தானவைதான். ஏனெனில் இரத்த சர்க்கரை அதிகமானாலும் குறைவானாலும் கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
குறைந்த சர்க்கரை அளவை எதையாவது சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், அதிகரித்த இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது மிகவும் சவாலானது. ஆனாலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டுவர தண்ணீர் ஒரு இன்றியமையாத முக்கிய மருத்துவமாக பயன்படுகிறது
உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர எளிதான வழி நிறைய தண்ணீர் குடிப்பது. நீங்கள் தினசரி நீர் உட்கொள்ளும் அளவு சாதாரணமாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். உடலில் இருந்து நச்சுகள் மற்றும் இன்சுலினை வெளியேற்ற சிறுநீரகங்களுக்கு தண்ணீர் பெரிய உதவி செய்கிறது. நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது, உங்கள் சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து இன்சுலினை அகற்றுவது கடினம்.
மேலும் இரத்த சர்க்கரை அளவு அதே நிலையில் இருக்கும். இதே நிலை நீடிக்கும்போது காலப்போக்கில், உயர் இரத்த சர்க்கரை அளவு சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது. சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தினசரி 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“