நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி| Dinamalar

புதுடில்லி: அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பது மிகவும் முக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவகர்கள் முதல் கூட்டத்தின் துவக்க நாளில் பிரதமர் மோடி பேசியதாவது:
எந்தவொரு சமூகத்திற்கும் நீதித்துறை அணுகுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விரைந்து நீதி வழங்குவதும் முக்கியம். மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும். அது, வாழ்வது போல், தொழில் செய்வது போல் நீதி கிடைப்பதும் எளிதாக இருத்தல் அவசியம்.

latest tamil news

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சிறையில் உள்ள விசாரணை கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும். விசாரணை கைதிகளுக்கு சட்ட உதவி வழங்கும் பொறுப்பை மாவட்ட சட்ட அதிகாரிகள் ஏற்கலாம். இவ்வாறு மோடி பேசினார்.

தலைமை நீதிபதி பேச்சு

latest tamil news

இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ரமணா பேசும் போது, நமது தேசத்தின் பலமே நமது இளைஞர்கள். உலகில் வாழும் இளைஞர்களில் 5ல் ஒரு இளைஞர் இந்தியாவில் தான் வசிக்கிறார். ஆனாலும், நம் இளைஞர்கள் மத்தியில் திறன் வாய்ந்த பணியாளர்கள் பலம் குறைவாக உள்ளனர். வெறும் 3 சதவீத இளைஞர்களே திறன்மிகு பணியாளர்களாக உள்ளனர். சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் குறிக்கோளுடன் நவீன இந்தியா உள்கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதற்காக ஜனநாயகம் அனைவருக்கும் பங்களிப்பை வழங்கும் இடமாகும். இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே,நீதி தேவைப்படும் அமைப்பை அணுக முடியும் என்பது உண்மை. ஏராளமான மக்கள் விழிப்புணர்வு மற்றும் தேவையான வழிமுறைகள் இல்லாமல் மவுனமாக அவதிப்படுகின்றனர். இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.