அதிமுக மாவட்ட கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி இணை செயலாளர் உறவினர் மறைவிற்கு ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு எம்பாஸ், மாடசாமி அவர்களின் உறவினரும், திரு. K. முத்துவேல் தேவர் அவர்களின் மகனுமான திரு. மு. கடற்கரையாண்டி என்கிற வெள்ளபாண்டி அவர்கள் மண் சரிந்து உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
திரு. மு. கடற்கரையாண்டி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.