பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் இரும்பு பைப்புகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து அந்த லாரியை கடந்து செல்ல முயன்றது.
அப்போது, மற்றோரு வழித்தடத்தில் இருந்து வாகனம் வந்ததால் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரியின் பின்பக்கத்தில் சிக்கியது. இதில், ஒட்டுநர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்தின் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.