இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு கடன் சேவை நிறுவனமான HVCL என்னும் வென்சர் கேப்பிடல் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி தனது வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி-ஐ தன்னுடன் இணைக்க அனைத்து தரப்பிடமும் அடுத்தடுத்து ஒப்புதலைப் பெற்று இணைக்கும் பணிகளைச் செய்து வரும் நிலையில், நிர்வாகம் மற்றும் வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்து வருகிறது.
இதன் அடிப்படையில் தான் HVCL என்னும் வென்சர் கேப்பிடல் நிறுவனத்தின் பங்குகளை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.
HVCL நிறுவனம்
ஹெச்டிஎப்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தனது சொந்த வென்சர் கேப்பிடல் நிறுவனமான HVCL நிறுவனத்தின் பங்குகளை முழுமையாகக் கைப்பற்றித் தனது முழுச் சொந்த கிளை நிறுவனமாக மாற்றியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
HVCL நிறுவனத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுமார் 19.5 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில் Housing Development Finance Corporation சுமார் 80.50 சதவீத பங்குகளை வைத்திருந்தது. தற்போது ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ வங்கியிடம் இருந்தச 19.5 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
97,500 பங்குகள்
HVCL நிறுவனத்தின் சுமார் 97,500 பங்குகளை எஸ்பிஐ வங்கியிடம் இருந்து ஒரு பங்கு விலை சுமார் 10 ரூபாய் மதிப்பீட்டில் கைப்பற்ற இரு தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பங்கு கைப்பற்றல் பணி ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் முடியும். HVCL நிறுவனம் 2004 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது. இது HDFC Property Fund-ன் இண்வெஸ்ட்மென்ட் மேனேஜர்.
ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி
ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி இணைப்பிற்குப் பின்பு இக்கூட்டணி சொத்து மதிப்பிலும் சரி, சந்தை மதிப்பிலும் சரி மிகப்பெரிய உயரத்தை எட்ட உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி இணைப்பிற்குப் பின்பு இக்கூட்டணியின் மொத்த சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.
எஸ்பிஐ Vs ஹெச்டிஎப்சி
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 26.64 லட்சம் கோடி ரூபாய், ஹெச்டிஎப்சி கூட்டணி அடுத்தச் சில வருடத்தில் தனது வேகமாகத் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் முறை மூலம் கட்டாயம் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
HDFC acquired its venture capital arm HVCL from SBI
HDFC acquired its venture capital arm HVCL from SBI ஹெச்டிஎப்சி ஆதிரடி.. வென்சர் கேப்பிடல் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியது..!