Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய அணி வெற்றி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது.
191 ரன்கள் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இன்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Tamil News Latest Updates
டிஎன்பிஎல் கோவை அணி வெற்றி
டிஎன்பிஎல் வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில், கோவை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 209 ரன்கள் இலக்குடன் ஆடிய கோவை அணி 20வது ஓவரின் கடைசி பந்தில் இலக்கை அடைந்து நெல்லை அணியை வீழ்த்தியது.
செஸ் ஒலிம்பியாட்.. முதல் சுற்றில் 6 இந்திய வீரர்கள் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், இந்திய ஓபன் ‘பி’அணியில் விளையாடிய ரவுனக் சத்வாணிஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மகளிர் ‘சி’ பிரிவில், ஹாங்காங் அணியை இந்திய மகளிர் அணி ஒயிட்வாஷ் செய்தது. ஈஷா கார்வதே, நந்திதா, சாஹிதி வர்ஷினி, பிரத்யுஷா போடா உள்ளிட்டோர் 4 புள்ளிகளுடன் வெற்றி பெற்றனர்.
ஓபன் சி பிரிவில் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி, தெற்கு சூடான் வீரர் அஜேக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஓபன் பிரிவில் இந்திய வீரர்கள் குப்தா, குகேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தமிழக வீரர் குகேஷ் அறிமுக போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இதுவரை 6 இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
அதிமுக ஆட்சியில் ரூ. 692 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆகஸ்ட் 1ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன்,ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்
சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில், டிஜிபி சைலேந்திர பாபு, சட்டத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னை ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பள்ளி, கல்லூரி வாசலிலேயே போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது. ஆன்லைன் ரம்மிக்காக நிபுணர் குழு அமைத்தனர்; ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வருவதாக தாயிடம் கல்லூரி மாணவி அடம்பிடித்துள்ளார். வீட்டிலேயே இருக்க தாய் அறிவுறுத்தியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல் அளித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆகஸ்ட் 1ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. இதில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
என்.எல்.சி. நிறுவனம், தற்போது பட்டதாரி பொறியாளர்கள் 299 பேரை தேர்வு செய்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட இல்லை. ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளில் தமிழர்களை புறக்கணிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் ‘கான்க்ளேவ் 2022’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று மலையாளத்தில் உரையாற்றினார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை. குரங்கம்மை பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என செய்தியாளர்களிடம் கூறினார்.
திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்றது.
பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி தொடக்க ஆட்டத்தில், கானா அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
அதேநேரம் மகளிர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. 155 ரன்கள் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
வைகை அணை 66 அடியை எட்டிய நிலையில், கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி பகுதியில் மகா புண்ணிய சேத்திரம் கோயில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
புதுக்கோட்டையில், சிங்கப்பூரிலிருந்து வந்த 35 வயதுடைய நபருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி காணப்பட்டது. அறிகுறி உடைய நபர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரிகள் மருத்துவ சோதனைக்காக சனிக்கிழமை பூனேவிற்கு அனுப்பப்பட உள்ளது.