அதிகார துஷ்பிரயோகம்: அரசு அதிகாரி சஸ்பெண்ட்| Dinamalar

தெலுங்கானாவில், அமைச்சரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்காதவர்களுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பிய நகராட்சி கமிஷனர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவில், நகராட்சி துறை அமைச்சரும், முதல்வரின் மகனுமான ராமராவின் பிறந்த நாள் விழா, 24ல் நடைபெற்றது. இதில், நகராட்சி ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் கங்காதர் தெரிவித்துள்ளார். ஆனால், நிகழ்ச்சியில் சிலர் பங்கேற்கவில்லை. கங்காதர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து அமைச்சர் ராமராவ், தன் சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில், ‘இது போன்ற செயல்களை நான் ஆதரிப்பதில்லை. சம்பவம் குறித்து அறிந்தவுடன், உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நகராட்சி கமிஷனரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டேன்’ என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.