அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓ கார்னர் உறுதி படுத்தியுள்ளார். “ஜோ பைடனுக்கு (79) சனிக்கிழமை ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பு தொடர்ந்து நான்கு நாட்கள் எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்று தெரிய வந்த நிலையில், சனிக்கிழமை எடுக்கப்பட்ட சோதனயில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. கண்டிப்பான தனிமைப்படுத்தும் நடைமுறைகளை அதிபர் மீண்டும் தொடங்குவார்.” என்று கெவின் ஓ கார்னர் தெரிவித்துள்ளார்.
இது உண்மையில் ‘ரீபவுண்ட்’ பாசிடிவிட்டியைக் குறிக்கிறது” என்று ஓ’கார்னர் தெரிவித்துள்ளார். பாக்ஸ்லோவிட் மருந்து மூலம் சிகிச்சையளிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ள அவர், அந்த சிகிச்சை முறை வைரஸ் தொற்றை அழித்து விடும். ஆனால், சிகிச்சை முடிவில் தொற்று இருப்பதாக தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடனுக்கு அறிகுறிகள் மீண்டும் தோன்றவில்லை. அவரது உடல்நிலை சீராக உள்ளது. எனவே, இந்த நேரத்தில் சிகிச்சையை மீண்டும் தொடங்க தேவையில்லை. தனிமைப்படுத்தலில் இருந்தால் போதும் எனவும் கெவின் ஓ கார்னர் தெரிவித்துள்ளார்.
Liz Truss: பிரிட்டன் பிரதமர் ஆகிறார் லிஸ் டிரஸ் – ஆய்வில் வெளியான தகவல்!
கடந்த 21ஆம் தேதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் இருந்த அவர், கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து விட்டார் எனவும், இனி அவருக்கு தனிமைப்படுத்துதல் தேவை இல்லை எனவும் அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு பின்னர் தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.