இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பானது அயலுறவுக்கு முதலிடம் கொள்கையால் வழிநடத்தப்படுவதாகவும் இந்தியாவின் புதிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொதுவான மரபுகள் மற்றும் இருநாடுகளினதும் மக்களிடையிலான ஆழமான உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான, நீண்டகால இருதரப்பு பங்குடைமையானது மேலும் வலுவடையுமெனவும் இந்திய ஜனாதிபதி நம்பிக்கையை குறித்த கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.