இன்று(ஆக. 1) உலக காகித தினம்| Dinamalar

“ஆயுதம் செய்வோம். நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம். கல்விச் சாலைகள் வைப்போம். ஓயுதல் செய்யோம். தலை சாயுதல் செய்யோம். உண்மைகள் சொல்வோம். பல வண்மைகள் செய்வோம்,” என ஆயுதத்திற்கு சமமாக காகிதத்தைக் கூறுகிறார் பாரதியார்.
காப்பதற்கு ஆயுதம் போல் கற்பதற்கு காகிதம் துணை புரிகிறது. உண்மையில் வரலாற்று
ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் நிறைய பேருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும்தான்
புரட்சிக்கே வித்திட்டிருக்கின்றன. அன்று முதல் இன்று வரை கல்வி, கருத்து, கண்டுபிடிப்பு, செய்திகளை உலகத்தில் அனைவருக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக காகிதம் இருந்து
வருகிறது.

சீனாவில் 2ம் நுாற்றாண்டில் இருந்து காகிதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில்
சாய்லுான் காகதித்தை உருவாக்கினார். கி.பி., 8ம் நுாற்றாண்டில் அரேபியர்கள் சீனாவில் மீது படையெடுத்து வென்றனர்.அப்பொழுது அரேபியர்கள் காகித உற்பத்தி கலையை கொண்டு சென்றனர். அவர்களிடமிருந்து கற்ற ஐரோப்பியர்கள் காகித கலையை உலகம் முழுவதும்
பரப்பினர்.முதன் முதலாக கடிதங்கள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் இவற்றின் மூலம் எளிதான தகவல் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது காகிதம்.

காலையில் கண் விழித்தவுடன் தேடுகின்ற நாளிதழில் இருந்து,நாள் துவங்குகின்ற நாட்காட்டி உள்பட துங்குவதற்கு முன்பு படிக்கின்ற வார இதழ்கள் வரை,பிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வரை, ஆரம்பப்பள்ளியில் இருந்து கல்லுாரி வரை, பாண்ட் பேப்பர் முதல் டிஸ்யூ பேப்பர் வரை, கல்யாணம் முதல் காதுகுத்து அழைப்பிதழ்கள் வரை, பெட்டிக்கடையில் இருந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை, பேப்பர் பயன்பாடு இல்லாத இடமே இல்லை.
காகித உபயோகம் அன்று முதல் இன்று வரை நம் தினசரி வாழ்வில் இரண்டற கலந்து விட்ட ஒரு பொருள். இதன் பயன்பாடு இல்லாமல் ஒரு நாளைக் கூட நம்மால் கடக்க முடியாது.
பகவத் கீதை, பைபிள், குர்ஆன், உலகப் பொதுமறை திருக்குறள் என புனித நுால்கள் அனைத்தும் காகித வடிவில்தான் நாம் பார்க்கிறோம். எனவே காகிதம் கற்க, கற்பிக்க உதவுகின்ற தத்துவங்கள் எடுத்துச் செல்கின்ற, மனிதனை பண்படுத்துகின்ற, உபன்யாசங்கள் எடுத்துச் சொல்கின்ற ஒரு புனிதமான பொருள்.
இது எல்லா வகையிலும் நமக்கு நன்மை தரக்கூடியதே. மனிதனின் புத்தக வாசிப்பிற்கும், எலக்ட்ரானிக் திரைகளில் வாசிப்பிற்கும் வித்தியாசம் உள்ளன. புத்தக வாசிப்பில் எந்தவித பாதிப்பும் இல்லை. புத்தக வாசிப்பு ஞாபக சக்தியை வளர்க்கிறது. புத்தக வாசிப்பு நமது ஆயுளை கூட்டுகிறது என்கிறதுஹார்வர்டு பல்கலை ஆய்வு.
புத்தகங்களை படிக்கும், எழுதிப்பார்க்கும் மாணவர்களின் கையெழுத்து திறன், படைப்பு அறிவு திறன் மிகவும் நன்றாக உள்ளது. காகிதம் 100 சதவீதம் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது. என்னதான் அலைபேசியில் தகவல்கள் பரிமாற்றம் செய்தாலும் உறவினர்களுக்கு கடிதத்தில் எழுதப்படும் அன்புள்ள அப்பா, அம்மா, மாமா, தாத்தா, பாட்டி என்ற வார்த்தையே பரவசப்படுத்தும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காகிதத்தை கொண்டாடும் வகையில் ஆக.1ல் காகித தினம் கொண்
டாடப்படுகிறது.

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு,தீப்பெட்டி தொழிற்சாலைக்கும் மட்டும் பெயர் பெற்றது அல்ல.காகித தயாரிப்புக்கும் பெயர் பெற்றது. வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து காகிதம் வாங்கப்பட்ட நிலையில் தற்சமயம் சிவகாசியில் இருந்து வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

நாளிதழாக உதவி புரிகிறது
காகிதம் என்பது எழுதுவதற்கும், அதன் மேல் அச்சிடுவதற்கும்,பொதி சுற்றுவதற்கும் பயன்படும் மெல்லிய பொருள் ஆகும். நாம் தினமும் உலங்கெங்கும் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள பெரும் உதவியாக இருப்பது நாளிதழ். அத்தகைய நாளிதழின் மூலக்காரணம் காகிதம் தான். எகிப்து நாட்டினர், முதன்முதலில் ‘பப்ரைஸ்’ என்ற தாளில் எழுதினர். அந்த பெயர்
நாளடைவில் மாறி ‘பேப்பர்’ என்று அழைக்கப்பட்டது. அரேபியர் காகிதத்தை ‘காகத்’ என்றனர். நாம் அதனை ‘காகிதம்’ எனவும், ‘தாள்’ எனவும் அழைக்கிறோம்.
– பாலாஜி, பேப்பர் மெர்ச்சன்ட் அசோசியேஷன் தலைவர், சிவகாசி.

மறுசுழற்சி முறையிலே காகிதம்
மரங்களை அழித்து தான் காகிதம் தயாரிக்கப்படுகிறது என்பது தவறான கருத்து. இந்தியாவில் 58 சதவீதம் மறுசுழற்சி முறையிலேயே காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அந்த மரங்களும் பேப்பர் மில் வைப்பவர்களால் வளர்க்கப்படும் மரங்களே. 17 சதவீதம் விவசாயக் கழிவுகளான கரும்புச்சக்கை, சோளத்தட்டை போன்றவற்றிலிருந்து காகிதம் தயாரிக்கப்படுகிறது.

– சுந்தர், விநாயகா பேப்பர் கம்பெனி
உரிமையாளர், சிவகாசி
பேப்பர் பதிவுகள் சிறந்தவை
கல்வி, மருத்துவம் உட்பட எந்த துறையாக இருந்தாலும் காகிதத்தின் பயன்பாடு
இன்றியமையாதது. சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழில் பிரசித்தி பெற்றது. ஆனால் இந்த தொழிலுக்கும் காகிதத்தின் பயன்பாடு முக்கியமானது. என்னதான் டிஜிட்டல் முறையில்
தகவல்கள் பதிவு செய்யப்பட்டாலும் பேப்பரில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகச் சிறந்தது.- ஜெய்சங்கர், தமிழ்நாடு காலண்டர்

உற்பத்தியாளர்கள் சங்கம் செயலாளர், சிவகாசி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.