வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் வண்ணத்துப்பூச்சி பூங்காவை காணுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை அருகே இருக்கும் வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்த நிலையில், கொரானா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட 7 பார்வையாளர்கள் காணுமிடம் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய சூழலில், இரவு விலங்குகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா பயோ சென்டர், பாம்புகள் இருப்பிடம் உள்ளே சென்று காணும் பறவைகளின் இல்லம் உள்ளிட்ட 4 இடங்கள் திறக்கப்பட்டது. அடுத்ததாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்க்கும் இடமான வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று முதல் திறக்கப்படுகிறது.
பார்வையாளர்கள் சென்று அதனை பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இது குறித்த தகவல் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.