சிக்கபல்லாபூர் : இறந்த கணவரின் சொத்துக்காக, இரண்டு மனைவியர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். இருவரிடமும் ஆவணங்கள் இருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.சிக்கபல்லாபூர், நந்தி பேரூராட்சியின் சிக்கனஹள்ளி கிராமத்தில் வசித்த நெனகப்பாவுக்கும், ஜெயலட்சுமிக்கும் 1985ல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், நெனகப்பா இறந்து விட்டார்.அவரது சொத்துகளை பெறும் நோக்கில், திருமண அழைப்பிதழ், கணவரின் இறப்பு சான்றிதழ் உட்பட, தேவையான ஆவணங்களுடன், ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அங்கு, இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவருக்கு முன்பே, வேறொரு பெண், நெனகப்பாவின் மனைவி என கூறி, ஆவணங்களை தாக்கல் செய்து, சொத்துகளுக்கு உரிமை கோரிஉள்ளார்.
ஆனால், இரண்டு மனைவியரிடமும், சரியான ஆவணங்கள் இருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. நெனகப்பா ஊர், ஊராக செல்பவர். செல்லும் இடங்களில் ஒவ்வொரு குடும்பம் வைத்திருந்தார். இது, முதல் மனைவி என கூறப்படும் ஜெயலட்சுமிக்கு, தலைவலியாக உள்ளது. இன்னும் எத்தனை பேர், நெனகப்பாவை கணவர் என, உரிமை கொண்டாடுவரோ என்ற பயத்தில் உள்ளார்.இது தொடர்பாக, நீதிமன்றம் முடிவு செய்யும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement