பொதுவாக அரசு ஊழியர்கள் அல்லாத, தனியார் ஊழியர்கள், பெண்கள், சுயதொழில் செய்பவர்கள் என பலருக்கும், மாத மாதம் வருமானம் கிடைக்க ஒரு திட்டம் என கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் அஞ்சலத்தின் மாதாந்திர வருவாய் திட்டமாகத் தான் இருக்கும்.
இதில் ரிஸ்க் என்பது துளியும் கிடையாது. நிரந்த வருமானம் தரும் ஒரு திட்டம், எல்லா வற்றிற்கும் மேலாக இது முதியோர்களுக்கும் ஏற்ற ஒரு திட்டமாகும்.
அந்த வகையில் இப்படி மாத வருமானம் தரும் அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் திட்டம் சிறந்ததா? அல்லது எஸ்பிஐ வழங்கும் வருடாந்திர திட்டம் சிறந்ததா? வாருங்கள் பார்க்கலாம்.
வெறும் ரூ.50ல் ஆரம்பித்த வணிகம்.. லட்சங்களில் வருமானம்.. லண்டன் வரை ஏற்றுமதி செய்யும் மீனாட்சி!

எஸ்பிஐ வருடாந்திர டெபாசிட் திட்டம்
இது மாத மாதம் வருமானம் தரும் ஒரு திட்டமாகும். இதில் வாடிக்கையாளர்கள் ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதுமானது. இந்த திட்டம் 36,60,84, மற்றும் 124 மாதங்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். குழந்தைகள் பெயரிலும் தொடங்கிக் கொள்ளலாம்.

வட்டி விகிதம்
இது கடைசியாக ஜூன் 14, 2022 அன்று மாற்றியமைக்கப்பட்டது. வங்கி தற்போது சாதாராண பொதுமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதம் 5.45 – 5.50% ஆகும். இதே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 5.95% – 6.30% ஆகும். இதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கால அவகாசத்தினை பொறுத்து இருக்கும்.

மாதாந்திர வருமான திட்டம்
இதே அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானம் தரும் திட்டமாக இருப்பின் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அதன் பிறகு 1000ன் மடங்கில் முதலீடு செய்து கோள்ளலாம். இதில் ஒரு தனி நபர் அதிகபட்சம் 4.5 லட்சம் ரூபாயும், இருவர் இணைந்து 9 லட்சம் ரூபாய் வரையிலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

சிம்பிள் வட்டி தான்
இந்த திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது 6.6% வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இந்த திட்டத்தில் சிம்பிள் வட்டி மட்டும் தான் கிடைக்கும். இது கூட்டு வட்டி கிடையாது. அதேபோல இந்த திட்டத்தில் இணையும்போது என்ன வட்டியோ அதேபோல, இந்த திட்டம் முடியும் வரை அதே வட்டி விகிதம் தான் வசூலிக்கப்படுகிறது.

எது பெஸ்ட்?
பொதுவாக அஞ்சலக மாதாந்திர திட்டத்தில் இணையும் போது என்ன வட்டி விகிதமோ, அதே தான் முதிர்வு வரைக்கும் கிடைக்கும். இதில் அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே எஸ்பிஐ-இல் அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. எஸ்பி கடன் வசதியும் உண்டு.
SBI Vs post office MIS scheme:Which is the best plan?Which one is suitable for investment?
SBI Vs post office MIS scheme:Which is the best plan?Which one is suitable for investment?/எஸ்பிஐ Vs அஞ்சலக மாதாந்திர திட்டம்.. உங்களுக்கு ஏற்றது எது.. எது லாபகரமானது?