ஓய்வூதியதாரர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பு..இனி ஈஸியா ஆயுள் சான்று பெறலாம்.. !

இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், அவ்வப்போது ஏதேனும் அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.

குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு சில அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.

முன்னதாக ஓய்வூதியத்தினை பெற ஓய்வூதியதார்கள் வீட்டில் இருந்தே கூட ஆயுள் சான்றிதழை கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதனை மிக எளிதாக பெறும் வகையில் வழிவகையும் அஞ்சலத்தில் செய்யப்பட்டது. அவர்கள் வீடு தேடி சென்று சேவைகளை வழங்கும் அளவுக்கு சேவைகள் மாற்றப்பட்டன.

பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம்.. EPFO முக்கிய முடிவு..!

Face authentication

Face authentication

எனினும் இவ்வாறு இருக்கும் இடத்தில் இருந்தே இந்த ஆயுள் சான்றிதழை வழங்குவதில் சில பிரச்சனைகளும் இருந்து வருகின்றன. ஆக அதனை தடுக்க EPFO அமைப்பானது, ஓய்வூதியதார்கள் இனி, தங்களது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க அவர்களின் முகத்தினையும்( Face authentication ) அங்கீகாரம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இத்தனை தொழில் நுட்பமானது ஏற்படும் சில பிரச்சனைகளை தடுக்க பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்

பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்

அரசின் இந்த அறிவிப்பினால் 73 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இறுதி காலம் வரையில் ஓய்வூதியம் பெற இது பயனுள்ளதாக இருக்கும். அதேபோல இதற்காக ஓய்வூதியதாரர்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. மாறாக அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த அங்கீகாரம் செய்து கொள்ளலாம் எனவும், இதன் மூலம் ஆயுள் சான்றிதழை இருக்கும் இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

சில பிரச்சனைகள்
 

சில பிரச்சனைகள்

மேலும் முதுமையின் காரணமாக பயோ மெட்ரிக் சோதனையில் சிரமங்கள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும்.

ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த சான்றிதழ் வழங்கபட வேண்டும். இதில் பயோமெட்ரிக் முறை பயபடுத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஓய்வூதியதாரர்கள் சில நேரங்களில் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஆக மத்திய அரசின் இந்த அறிப்பால் இனி எந்த பிரச்சனையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பயனுள்ள திட்டம்

பயனுள்ள திட்டம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்த முக அங்கீகாரம் தொடர்பான தொழில் நுட்பத்தினையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

நிச்சயம் வயதானவர்களுக்கு எளிதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்கள் ஓய்வூதியத்தினை பெற இந்த பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Digital Life Certificate for EPFO Pensioners through face authentication

DigitalLife Certificate for EPFO Pensioners through face authentication/இனி ஈஸியா ஆயுள் சான்று பெறலாம்.. ஓய்வூதியதாரர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பு..!

Story first published: Sunday, July 31, 2022, 11:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.