காமன்வெல்த் – இந்தியாவுக்கு 3வது தங்கம்

பர்மிங்காம்:
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில், 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில், ஆடவர் பளு தூக்குதல் 73 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றுள்ளார்.

இந்த பதக்கம் மூலம், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.