ஜார்க்கண்ட் மாநில எம்எல்ஏக்கள் 3 பேர் சென்ற காரில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய நிலையில், அவர்களை மேற்கு வங்காள காவல்துறை கைது செய்துள்ளது.
ஜார்க்கண்டின் அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் ராணிஹதி என்ற இடத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. காரில் இருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களான இர்ஃபான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் பிக்சல் கொங்கரி என்பது தெரியவந்தது.இதையடுத்து விசாரணைக்கு பின் 3 எம்எல்ஏக்கள் உட்பட 5 பேரை மேற்கு வங்காள காவல்துறை கைது செய்தது. இதற்கிடையே எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்கி ஜார்க்கண்டில் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் கைதான 3 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபுசோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது. பாரதிய ஜனதா எதிர்க்கட்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM