Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் வெறுமனே ஒரு பொழுதுபோக்கு புதிர்களாக மட்டும் இல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காலி கோப்பையைக் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க ஷார்ப் பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாகி இருப்பதால் புதிர்களுக்கான விடையை வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் ஒரு சூறாவளி போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் வெளிச்சத்தை நோக்கி படையெடுக்கும் விட்டில் பூச்சிகள் போல, ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து புதிர்களை விடுவித்து வருகிறார்கள்.
இந்த புதிர் மிகவும் சுவாரசியமானது. அழகழகான கோப்பைகளுக்கு இடையே மறைந்திருக்கும் காலி கோப்பையை 8 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் ஷார்ப்தான் பாஸ். ஏனென்றால், நிறைய அழகழகான கண்ணைக் கவரும் கோப்பைகளுக்கு இடையே இருக்கும் காலி கோப்பையை 8 நொடிகளில் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. மிகவும் சவாலானது.
கண்ணைக் கவரும் கோப்பைகள் நிறைந்த இந்த படத்தை, ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் வரைந்துள்ளார். இந்த படத்தில் காலி கோப்பை ஒன்றை மறைத்து வைத்து கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று எல்லோருக்கும் சவால் விடுத்துள்ளார்.
காலி கோப்பையை 8 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். நிஜமாவே நீங்கள் ஷார்ப்தான். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். அந்த காலி கோப்பை இந்த படத்தில் இடது பக்கத்தில் இருக்கிறது. இப்போது மீண்டும் ஒருமுறை படத்தை உற்று கவனித்து தேடுங்கள்.
இப்போது அனேகமாக காலி கோப்பையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. எங்கே காலி கோப்பை இருக்கிறது என்று காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள் ரிலாக்ஸாக இருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”