கிரிக்கெட் மைதானத்தில் அதிரடி ஆட்டம் போட்ட கஸ்தூரி
கடந்த சில தினங்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அந்த போட்டியில் தொகுப்பாளியாக இடம்பெற்றுள்ளார் நடிகை கஸ்தூரி. இந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று கோவை மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தான் நடிகை கஸ்தூரி இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதோடு இதுதான் எனது ஸ்டைலில் உள்ள பிட்ச் ரிப்போர்ட் என்றும் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார்.