சாக்லேட் பால்ஸ் இன் கஸ்டர்ட் சாஸ்
தேவையானவை:
பால் – 2 கப்
சர்க்கரை – அரை கப்
கஸ்டர்டு பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
சாக்லேட் பிஸ்கட் – 10
துருவிய சாக்லேட் அல்லது
சாக்லேட் சிப்ஸ், டிரை ஃப்ரூட்ஸ்,
நட்ஸ் – தேவையான அளவு
செய்முறை:
பாலில் கஸ்டர்டு பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரைச் சேர்த்து, கைவிடாமல் கிளறிக் கொதிக்க விடவும். கெட்டியாக தோசை மாவு பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.
சாக்லேட் பிஸ்கட்டுகளை கரகரப்பாகப் பொடிக்கவும். பிறகு பாலுடன் கலக்கவும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, மேலே துருவிய சாக்லேட் அல்லது சாக்லேட் சிப்ஸ், பொடித்த டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் தூவிப் பரிமாறலாம்.
பாலக் தாலி பித் (கீரை அடை)
தேவையானவை:
பாலக் கீரை – நறுக்கியது
கோதுமை மாவு – தலா ஒரு கப்
கடலை மாவு – அரை கப்
கம்பு மாவு, அரிசி மாவு – தலா கால் கப்
உப்பு, பச்சை மிளகாய்,
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கு
மஞ்சள், இஞ்சி, சீரகம் –
தலா ஒரு டீஸ்பூன்
ஓமம் – சிட்டிகை
சர்க்கரை – அரை டீஸ்பூன்
தயிர் – அரை கப்
செய்முறை:
இஞ்சி, சீரகம், பச்சை மிளகாயை மிக்சியில் கரகரப்பாகப் பொடிக்கவும். கோதுமை மாவு, கடலை மாவு, கம்பு மாவு, அரிசி மாவு, கீரை, உப்பு, தயிர், சர்க்கரை, ஓமம், மிளகாய்த்தூள், அரைத்த பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு சிறிது எண்ணெய் தடவி மூடி அரைமணி நேரம் வைக்கவும்.
மாவை சிறிய உருண்டைகளாக்கவும். வாழை இலையில் மாவை வைத்து தட்டவும். சூடான தவாவின் மேல் போட்டு, இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு கரகரப்பாக வேகவைத்து எடுக்கவும்.
பூரி பரோட்டா
தேவையானவை:
மைதா மாவு – 2 கப்
உப்பு – அரை டீஸ்பூன்
சோள மாவு – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
மைதாவுடன் சோள மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும். மேலே சிறிதளவு எண்ணெய் தடவி அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை அடித்துப் பிசைய வேண்டும். பிசைந்த மாவில் நெய் தடவி மீண்டும் பிசையவும். பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கிப் பூரிகளாகத் தேய்க்கவும். சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
உருளைக்கிழங்கு கறி
தேவையானவை:
உருளைக்கிழங்கு – 4
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்
கொத்தமல்லி – அலங்கரிக்க
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கைக் கழுவி சதுரமாக நறுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டுக் காயவைத்து சீரகம் போட்டு வெடித்ததும் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை அரை கப் தண்ணீரில் கரைத்து, உருளைக்கிழங்குடன் சேர்த்து மூடி, சிறிது நேரம் வேக விடவும். குழம்பு பதம் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தூவி, பூரி அல்லது பரோட்டாவுடன் சூடாகப் பரிமாறவும்.