சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் கடந்த வியாழக்கிழமை ஆவின் பால் விநியோகஸ்தர் 300 லிட்டர் (ஆரஞ்சு) பால் பாக்கெட்டுகளை மாதாவரம் பால் பண்ணையில் இருந்து வாங்கியிருந்தார்.
இந்த 300 லிட்டர பால் பாக்கெட்டுகளில் சில பாக்கெட்டுகள் உடைந்துபோய் காணப்பட்டன. இதனால் சில பாக்கெட்டுகளில் இருந்த பால் கசிந்து வீணானது.
இது குறித்து பேசிய தமிழ்நாடு பால் முகவர் சங்கத் நிறுவனத் தலைவர் பொன்னுச்சாமி, “இது தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.
இதனால் பால் முகவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஒரு பால்முகவர் 300 பாக்கெட்டுகள் விற்றால்தான் ரூ.225 லாபம் கிடைக்கும். ஆனால் 15க்கும் மேற்பட்ட பால் பாக்கெட்டுகள் வீணாகியுள்ளன. இதனால் ஒரு பால் முகவர் நஷடத்தை சந்திப்பார்.
எனவே அரசு தடிமனான பால்பாக்கெட் கவர்களை பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“