தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாக தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இந்த வாரத்தில் 2.39% ஏற்றம் கண்டுள்ளது. இது தங்க ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது, இது இன்னும் எந்தளவுக்கு அதிகரிக்குமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்த்ததை போலவே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், தங்கம் விலையானது அதிகரித்துள்ளது.
வட்டி விகிதம் அதிகரித்தாலும் டாலரின் மதிப்பானது நடப்பு வாரத்தில் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்பட்டது. இது தங்கம் விலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளது. இதற்கிடையில் வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படியிருக்கும் இந்த ஏற்றம் இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் குறையுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மூன்று வார உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்கள் இனி கனவில் தான் நினைக்கணும் போல!
பேங்க் ஆப் இங்கிலாந்து நடவடிக்கை
பேங்க் ஆப் இங்கிலாந்து ஆனது ஏற்கனவே டிசம்பர் 2021 முதல் வட்டி விகிதத்தினை 5 முறை அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து 4 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ள நிலையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் கூட்டத்தினால் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக டாலரின் மதிப்பு, பவுண்ட் மதிப்பு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரிசர்வ் வங்கி கூட்டம்
வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தினை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இது இந்திய பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். அதேபோல ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவிலேயே இருந்து வரும் நிலையில், இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவின் வேலை தரவு
அமெரிக்காவில் வரும் வாரத்தில் பண்ணை அல்லாத வேலை வாய்ப்பு குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இது அமெரிக்க டாலரின் மதிப்பு, பொருளாதாரம் குறித்த வளர்ச்சியினை சுட்டிக் காட்டும் விதமாக அமையலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கோண்டு அமெரிக்க மத்திய வங்கியினை நடவடிக்கை எடுக்க தூண்டலாம்.
ஓபெக் கூட்டம்
ஓபெக் கூட்டமானது வரும் வாரத்தில் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவால், கச்சா எண்ணெய் விலையில் தாக்கம் இருக்கலாம். இதன் காரணமாக பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனினும் இந்த கூட்டத்தில் உற்பத்தியினை அதிகரிக்க எண்ணெய் நாடுகள் ஒப்புக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதனையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
உற்பத்தி குறித்தான பிஎம்ஐ தரவு
அமெரிக்கா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் உற்பத்தி குறித்தான தரவானது வரும் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தங்கம் விலையானது வரும் வாரத்தில் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்?
நடப்பு வாரத்திலேயே தங்கம் விலையானது சவரனுக்கு 38,520 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1764 டாலர்கள் என்ற லெவலில் காணப்பட்டது. இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 51,430 ரூபாய் என்ற லெவலிலும் காணப்பட்டது.
5 key aspects that will determine the price of gold? What to watch out for?
5 key aspects that will determine the price of gold? What to watch out for?/தங்கம் விலையை தீர்மானிக்க போகும் 5 முக்கிய அம்சங்கள்.. கவனிக்க வேண்டியது என்ன?